» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்க விழா: சபாநாயகர் மு.அப்பாவு பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 12:51:08 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை பேரவைத்தலைவர் மு.அப்பாவு குத்துவிளக்கேற்றி முகாமினை பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை இன்றுதொடங்கி வைத்தார்க. அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி டவுண் லெஷ்மி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர் மோனிகா ராணா, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி முகாமினை பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 3768 முகாம்கள் கிராமப்புறங்களிலுள்ள 6232 முகாம்கள் ஆக மொத்தம் 10,000 முகாம்கள் மூலம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும், நகர் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காக இத்திட்டத்தினை சிதம்பரத்தில் துவக்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தில் மூலம் பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 55 வார்டுகளுக்கு 38 முகாம்களும், களக்காடு, விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 நகராட்சி பகுதிகளில் 69 வார்டுகளுக்கு 29 முகாம்களும், 17 பேரூராட்சிகளை சார்ந்த 273 வார்டுகளுக்கு 34 முகாம்களும், ஊராட்சி பகுதிகளுக்கு 154 முகாம்களும் என 255 முகாம்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று முதல் 07.10.2025 வரை நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான கோரிக்கை மனுக்கள் பெறுவதற்கு மூன்று அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவத்துறையின் மூலம் சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை உழவர்நலத்துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவ மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை போன்ற துறைகளின் மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு சேவைகள் வழங்கப்படவுள்ளது.
மேலும், தாட்கோ, மாவட்ட தொழில்மையம் போன்ற துறைகளின் மூலம் மானியத்தில் கடனுதவிகள் வழங்கப்பட்டு தொழில் முனைவோர்களாக மாறுவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. கலைஞர் கைவினைத்திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டம் போன்ற திட்டங்களில் பயனடைந்து புதிய தொழில் நிறுவனங்களை தொடங்கி, படித்த இளைஞர்கள் மற்றும் தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இத்துறைகளை அணுகி தேவைப்படும் சான்றிதழ்களுடன் விண்ணப்பித்து தொழில் தொடங்குவதற்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான தீர்வுகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) இரா.ரேவதி, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தலைவர் விஜிலா சத்தியானந்த், நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர், சுப்பிரமணியன், ஜூலியட், ராஜேஸ்வரி, முக்கிய பிரமுகர்கள் சுப்பிரமணி, வட்டாட்சியர் சந்திரஹாசன் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)
