» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!

சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)



செங்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்காசி முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்..

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் எவ்வித காரணமில்லாமல் பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முஜிபுர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். 

பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆட்படாத செங்கோட்டை எஸ்.ஆர்.எம். பள்ளி ஆசிரியைகளின் பணி மாறுதலை ரத்து செய்ய வலியுறுத்தியும், இதற்கு காரணமான முன்னாள் தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இம் மாறுதலுக்கு உத்தரவு வழங்கிய தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்தும் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மாவட்ட தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் உட்பட இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் முதுகலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory