» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலியில் விண்வெளி தொழில்நுட்ப காட்சி அரங்கம்: ஆட்சியர் திறந்து வைத்தார்!
வியாழன் 7, நவம்பர் 2024 3:32:20 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் விண்வெளி தொழில்நுட்ப காட்சி அரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் பொதுமக்கள் மாணவர்கள் விண்வெளி குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக உருவாக்கப்பட்ட விண்வெளி தொழில்நுட்ப காட்சி அரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தென் மண்டல அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியக இயக்குனர் சஜூபாஸ்கரன் முன்னிலையில் இன்று (07.11.2024) திறந்து வைத்து பார்வையிட்டார்.
நாடு முழுவதும் ஒன்றிய அரசின் கீழ் 27 மாவட்ட அறிவியல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தென் மண்டலத்தில் மட்டும் தமிழகத்தின் நெல்லை மாவட்ட அறிவியல் மையம் உள்பட ஐந்து மையங்கள் செயல்பட்டு வருகிறது. நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அறிவியல் மற்றும் விஞ்ஞான பூர்வமான செய்திகளை தெரிந்து கொள்ளும் வகையில் ஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் விண்வெளி குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விண்வெளி தொழில்நுட்ப காட்சி அரங்கம் ரூ.40 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் விண்வெளியில் செயற்கை கோள் செயல்படும் விதம், விண்வெளிக்கு செல்லும் மனித மாதிரி, விண்வெளி மைய செயல்பாடுகள், ராக்கெட் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விண்வெளி தொழில்நுட்ப காட்சி அரங்கம் பெங்களூர் விஸ்வேஸ்வரய்ய அருங்காட்சியகத்தில் உள்ளது. இரண்டாவதாக நெல்லை அறிவியல் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், அண்ணா பல்கலைக்கழக முதல்வர் செண்பக விநாயக மூர்த்தி, அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் நவ ராம்குமார், மாவட்ட அறிவியல் மைய அலுவலர் முத்துகுமார் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)


