» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாட்ஸ்அப் மூலம் திமிங்கல உமிழ்நீரை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயற்சி : 3 பேர் கைது
ஞாயிறு 8, டிசம்பர் 2024 9:42:06 AM (IST)
விக்கிரமசிங்கபுரம் அருகே வாட்ஸ்அப் மூலம் திமிங்கல உமிழ்நீரை ரூ.5 லட்சத்திற்கு விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம் பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி பகுதியில் திமிங்கலத்தின் உமிழ்நீரை சிலர் கடத்தி வந்து விற்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அம்பை துணை இயக்குனர் இளையராஜா உத்தரவின் பேரில் பாபநாசம் வனச்சரகத்தினர் அகஸ்தியர்பட்டி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு 3 பேர் சந்தேகிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் 3 பேரும் அம்பை மேலப்பாளையம் தெருவைச் சேர்ந்த இசக்கி பாண்டி மகன் செல்வம், வீரவநல்லூர் ரெயில்வே பீடர் ரோடு மைக்கேல் மகன் சவரிதாசன், அம்பை அம்மன் சன்னதி தெரு சுப்பையா மகன் பரமசிவன் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் வாட்ஸ்-அப் மூலம் திமிங்கல உமிழ்நீரை ரூ.5 லட்சத்திற்கு விற்க இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அகஸ்தியர்பட்டி பகுதியில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து 2¾ கிலோ எடை கொண்ட திமிங்கல உமிழ்நீர் கட்டிகளையும், காகித பையில் இருந்த துகள்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)

திருநெல்வேலி நலவாழ்வுச் சங்கத்தில் பணியிடங்கள் : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
திங்கள் 12, ஜனவரி 2026 5:42:05 PM (IST)

