» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மதுவில் விஷம் கலந்து குடித்து வக்கீல் தற்கொலை: போலீசார் விசாரணை
ஞாயிறு 2, மார்ச் 2025 11:00:59 AM (IST)
நெல்லையில் மதுவில் விஷம் கலந்து குடித்து வக்கீல் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை வண்ணார்பேட்டை திருக்குறிப்பு தொண்டர் தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் கணேசன் (33), வக்கீல். இவருடைய மனைவி குடும்ப பிரச்சினையால் கணேசனை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் கணேசன் தூங்கிய அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் எந்த பதிலும் வராததால், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.அப்போது கணேசன் வாயில் நுரை தள்ளியவாறு உடல் அசைவற்று கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசாரும் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கணேசன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
