» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மையங்களில் ஆட்சியர் நேரில் ஆய்வு
திங்கள் 3, மார்ச் 2025 12:41:40 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வினை 20,232 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் 03.03.2025 முதல் 27.03.2025 முடிய நடைபெறுகிறது. திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது. இந்த பொதுத்தேர்வினை 8,921 மாணவர்களும் 10,895 மாணவிகளும் என மொத்தம் 19,816 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் தனி தேர்வாளர்கள் 416 மாணவர்களும் ஆக மொத்தம் 20,232 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் (28 அரசுப்பள்ளிகள், 38 அரசு உதவிபெறும் பள்ளிகள், 06 தனியார் பள்ளிகள்) மற்றும் பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலை 01 மையம் என மொத்தம் 73 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
மேலும், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதற்கும், தேர்வுகள் முடிந்த பிறகு தங்களின் இடங்களுக்கு செல்லவும் வசதியாக போதுமான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் ஆகியவற்றில் தேவையான சூழ்நிலையில் பயன்படுத்த வசதியாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும் மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வுக்கு அமைக்கப்பட்டுள்ள 73 தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து பல்வேறு வழித்தடங்கள் வழியாக வினாத்தாட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2,000 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நிலையான படை 110 ஆசிரியர்களும், அதிகாரிகள் தலைமையில் 7 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மேல்நிலை முதலாம் ஆண்டுக்கான தேர்வு 05.03.2025 முதல் 27.03.2025 வரை நடைபெறவுள்ளது. 9,307 மாணவர்களும், 10,991 மாணவிகளும், தனி தேர்வாளர்கள் 398 மாணவ,மாணவியர்கள் ஆக மொத்தம் 20,696 மாணவ,மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
இன்று நடைபெற்ற ஆய்வின் போது இணை இயக்குநர் ஞானகௌரி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
