» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் அதிரடி கைது
செவ்வாய் 4, மார்ச் 2025 8:41:00 AM (IST)
புளியங்குடியில் தனியார் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் வாட்டர் டேங்க் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ். இவரது மகன் பிரான்சிஸ் (35). இவர் புளியங்குடியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தற்போது, அரசு பொது தேர்வை முன்னிட்டு மாணவர்களுக்கு பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்பு நடைபெற்று வருகிறது.
சம்பவத்தன்று 10-ம் வகுப்பு மாணவனுக்கு ஆசிரியர் பிரான்சிஸ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நல அலுவலர் அருண்பிரசாத், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது, பிரான்சிஸ், மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர் அருண்பிரசாத் புளியங்குடி ேபாலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பிரான்சிசை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
