» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உரிமம் இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி கந்துவட்டி கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது!

புதன் 5, மார்ச் 2025 8:43:32 PM (IST)

நெல்லை அருகே உரிமம் இல்லாமல் நிதி நிறுவனம் நடத்தி பெண்ணிடம் கந்துவட்டி கேட்டு  மிரட்டல் விடுத்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி கட்டபொம்மன் தெருவை சேர்ந்த சுரேஷ் (27), அம்பை ஊர்காடு பகுதியை சேர்ந்த அசோக்ராஜா (30), வி.கே.புரம் கம்பலத்தார் தெருவை சேர்ந்த செல்வகுமார் (21), கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரம் யாதவர் தெருவை சேர்ந்த சங்கர்ராஜா ஆகிய 4பேர் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். 

இவர்கள் அம்பாசமுத்திரம், வி.கே.புரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கந்து வட்டி வசூலிப்பதாகவும், நிதி நிறுவனத்திற்கு உரிய அனுமதியை அவர்கள் பெறவில்லை எனவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற கூலி தொழிலாளியின் மனைவி ரேவதி என்பவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேசிடம் கடன் பெற்றுள்ளார். 

அவர் கடன் தொகையை செலுத்த தாமதமானதால், கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் அவர் வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த ரேவதி வி.கே.புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் உரிய அனுமதி இன்றி நிதி நிறுவனங்களை நடத்தியதாக கூறி சுரேஷ் உட்பட 4 பேரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து

RameshMar 6, 2025 - 10:00:07 AM | Posted IP 172.7*****

கடுமையான போலீஸ் நடவடிக்கை அவசியம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory