» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நண்பரை கழுத்தை அறுத்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வியாழன் 6, மார்ச் 2025 8:43:45 AM (IST)
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கழுத்தை அறுத்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை டவுன் மேல மவுண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற ரகுமான் கான் (50), கூலி தொழிலாளி. இவரும், பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்த சுடலைமணி மகன் ஜெயபிரகாஷ் (35), டவுன் பெருமாள் கீழரத வீதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுப்பிரமணியன் (36) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.
கடந்த 20.7.2016 அன்று ராஜா தனது வீட்டில் உறவினரான ஜோதி உசேன் (40) மற்றும் நண்பர்கள் ஜெயபிரகாஷ், சுப்பிரமணியன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயபிரகாஷ், சுப்பிரமணியன், ஜோதி உசேன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தியால் ராஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், குற்றம் சாட்டப்பட்ட ஜெயபிரகாஷ், சுப்பிரமணியன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் ஜோதி உசேன் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
திங்கள் 30, ஜூன் 2025 8:40:03 AM (IST)
