» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98.81 இலட்சம் மதிப்பில் உபகரணங்கள்: அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
ஞாயிறு 29, ஜூன் 2025 12:49:57 PM (IST)

திருநெல்வேலியில் 1231 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.98.81  இலட்சம் மதிப்பில் உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
 திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில்  இன்று நடைபெற்ற விழாவில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் சமுதாய பொறுப்பு நிதித் திட்டத்தின் கீழ்;  ரூ.98.81  இலட்சம் மதிப்பில் 1231 மாற்றுத்திறனாளி உபகரணங்களை பயனாளிகளுக்கு   நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார்,  பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் மருத்துவர்.மோனிகா ராணா  துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், இந்தியன் ஆயில் நிறுவனம் விற்பனை மேலாளர் பிரகதீஷ்வரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர்   செல்வலெட்சுமி அபிதாப், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சு.சிவசங்கரன், அலிம்கோ நிறுவன மேலாளர்கள் பி.கே.குப்தா, ரிஷப் மெக்ரோட்ரா, மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)




