» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆலோசனை நடத்தினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் இ.அ.ப., முன்னிலையில் ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வில் பேரூராட்சிகளின் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.605 கோடி மதிப்பில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர், இராதாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 831 ஊரக குடியிருப்புகளுக்கு நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், ரூ.423.13 கோடி மதிப்பில் களக்காடு நகராட்சி, வடக்கு வள்ளியூர், பணகுடி, திசையன்விளை, ஏர்வாடி, திருக்குறுங்குடி, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, ஆகிய 7 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டதில் களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சி பகுதிகளுக்கு சேரன்மகாதேவி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுக்கப்பட்டு கங்கனான்குளம் பகுதியில் உள்ள திருவிருத்தான்புள்ளியில் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
இத்திட்டத்திற்கு 24 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகிறது. 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் முதல் கூடுதல் பணியாளர்களை கொண்டு விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து 831 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.605 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் மேலமுன்னீர்பள்ளம் பகுதியில் தண்ணீர் எடுக்கப்பட்டு, சிங்கிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும், பிரண்டமலை பகுதிக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நீர்நிலை தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 91 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன.
இக்கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் வரும் மாதம் இறுதிக்குள் முடிப்பதற்கு கூடுதல் பணியாளர்களை வரவழைக்கப்பட்டுள்ளனர். இப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் கணேசன், மேற்பார்வை பொறியாளர் கருப்பையா, நிர்வாக பொறியாளர்கள் ராமலெட்சுமி, பாக்கியராஜ், உதவி நிர்வாக பொறியாளர் ஆசிக் அகம்மது, வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், பணகுடி பேரூராட்சித் தலைவர் தனலெட்சுமி தமிழ்வாணன், வள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் கண்ணன், பணகுடி பேரூராட்சி துணைத் தலைவர் புஷ்பராஜ், நம்பி உட்பட அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 5 கோடி மதிப்புள்ள வழக்குகளுக்கு தீர்வு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)


