» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)
வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நெல்லை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லை ரெட்டியார்பட்டி ஸ்பென்சர் காலனியை சேர்ந்தவர் குத்தால விசேஷ். இவருக்கு சொந்தமாக பாளையங்கோட்டை தாலுகா டக்கரம்மாள்புரம் அருகே 10 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு வழங்கக்கோரி பெருமாள்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தனது தந்தை மூலம் விண்ணப்பிக்க வந்தார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் மற்றும் வணிக உதவியாளர் உதயகுமார் ஆகியோர் தற்காலிக மின் இணைப்பு வழங்க ரூ.7,500 லஞ்சமாக கேட்டுள்ளனர். இதுகுறித்து குத்தால விசேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
தொடர்ந்து அவர்களின் அறிவுரையின்பேரில் குத்தால விசேஷ் கடந்த 30.9.2009 அன்று மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று ரசாயனம் தடவிய பணம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக 2 மின்வாரிய அதிகாரிகளையும் கைது செய்தனர்.
இவர்கள் மீதான வழக்கு நெல்லையில் ஊழல் வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி சுப்பையா தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சிவக்குமார், உதயகுமார் ஆகிய 2 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேட்புமனு படிவங்களை தொகுதிகளுக்கு அனுப்பும் பணி: ஆட்சியர் இரா. சுகுமார் தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 17, மார்ச் 2026 3:52:43 PM (IST)

பிலாஸ்பூர் - நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்: கேரளாவின் சேர்த்தலாவில் கூடுதல் நிறுத்தம்
செவ்வாய் 17, மார்ச் 2026 10:24:55 AM (IST)

கார் தீப்பிடித்து எரிந்து விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அச்சம்!
செவ்வாய் 17, மார்ச் 2026 10:15:08 AM (IST)

அரசுப் பள்ளி ஆசிரியைக்குச் சரமாரி அரிவாள் வெட்டு : குடும்பத் தகராறில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 17, மார்ச் 2026 8:25:54 AM (IST)

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)

