» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

வியாழன் 6, மார்ச் 2025 5:10:42 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்ட அரசிதழில் தெரிவிக்கப்பட்ட வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருநெல்வேலி சரகத்தில் தாழையூத்து EB முதல் சிப்காட் வரை, சிப்காட் முதல் கங்கைகொண்டான் ரயில்வே ஸ்டேசன் வரை, சிப்காட் முதல் கங்கைகொண்டான் வரை, நெல்லை சந்திப்பு ரயில்வே ஸ்டேசன் முதல் நெல்லையப்பர் கோவில் வரை, முன்னீர்பள்ளம் முதல் பொன்னாகுடி வரை, பொன்னாகுடி முதல் புதுக்குளம் பிரிவு வரை, தருவை முதல் புதுக்குளம் பிரிவு வரை, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முதல் தமிழ்நகர் வரை, நெல்லை சந்திப்பு ரயில்வே ஸ்டேசன் முதல் சீயோன் பட்டினம் வரை, 

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முதல் மிதிளாபுரி வரை, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முதல் வடுகப்பட்டி வரை, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முதல் சாய்பாபா கோவில் வரை, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முதல் சாய்பாபா கோவில் வரையிலான 13 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்குவதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப் பேருந்துக்கான SCPA விண்ணப்பப்படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து Online –ல் கட்டணம் ரூ.1500+100=ரூ.1600/- செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து, விலாச சான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் 15.03.2025 முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், திருநெல்வேலி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம்.

மேலும், மாவட்ட அரசிதழில் எண்.1, நாள்.13.02.2025-இல் அறிவிக்கப்பட்ட வழித்தடம் எண்.6,9,10,14, 16, 17, 18, 19 மற்றும் 20-ஆக வெளியாகிருந்த வழித்தடங்களான திருநெல்வேலி சரகத்தில் நெல்லை டவுண் ஆர்ச் முதல் வல்லவன்கோட்டை கீழுர் வரை, ஜான்சன் நகர் சாய்பாபா கோவில் முதல் சந்திப்பு ரயில்வே ஸ்டேசன் வரை, ஜான்சன் நகர் சாய்பாபாபா கோவில் முதல் சந்திப்பு ரயில்வே ஸ்டேசன் வரை, அம்பாசமுத்திரம் வட்டத்தில் கங்கனாங்குளம் முதல் மேலச்செவல் வரை, மூலச்சி முதல் ரெட்டியார்புரம் விளக்கு வரை, அம்பாமுத்திரம் முதல் பாப்பாக்குடி வரை, முக்கூடல் பாரத் G.K.பெட்ரோல் பங்க் முதல் சீதபற்பநல்லுர் வரை மற்றும் வள்ளியூர் வட்டத்தில் களக்காடு பேருந்து நிறுத்தம் முதல் கழுங்கடி நாடார் குடியிருப்பு வரை, மாவடி முதல் ஏர்வாடி வரை ஆகிய வழித்தடங்கள் தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அரசிதழில் எண்.1, நாள்.13.02.2025-இல் அறிவிக்கப்பட்ட வழித்தடம் எண்.15, 21, 22, 23, 24 வெளியாகிருந்த வழித்தடங்களான அம்பாசமுத்திரம் வட்டத்தில் அம்பாசமுத்திரம் முதல் முக்கூடல் வரை மற்றும் வள்ளியூர் சரகத்தில் திருமலாபுரம் முதல் திருக்குறுங்குடி வரை, விலவன்புதுர் முதல் ஏர்வாடி வரை, வள்ளியூர் ரயில்வே ஸ்டேசன் முதல் நான்குநேரி வரை, வள்ளியூர் முதல் தளபதிசமுத்திரம் வரை வெளியாகியிருந்த வழித்தடங்கள் தற்போது திரும்ப பெறப்படுகின்றது.  மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory