» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு!

வியாழன் 6, மார்ச் 2025 8:04:26 PM (IST)

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியராஜ் (72) என்ற ஆயுள் தண்டனை உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், முனீர்பள்ளம் அருகே ஆரைக்குளத்தைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் பாக்கியராஜ். 1989 ஆம் ஆண்டு முனீர்பள்ளம் காவல் நிலையத்தில் 302 IPC பிரிவின் கீழ் தொடரப்பட்ட கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த 2023 டிசம்பர் 7ஆம் தேதி திருநெல்வேலி மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக முதுகு வலி, இடது தொடையில் வலி ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். அங்குள்ள IMCU ORTHO WARD-ல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 6) பிற்பகல் 1.50 மணியளவில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory