» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)
வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை அருகே உள்ள கீழச்செவல் நயினார்குளம் களத்து தெருவைச் சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன் (37). தொழிலாளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந்தேதி மாலையில் வடுவூர்ப்பட்டி டாஸ்மாக் கடையில் இருந்து வாணியங்குளம் செல்லும் மண் பாதையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அங்கு வந்த கும்பல் திடீரென்று சங்கர சுப்பிரமணியனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. மேலும் அவரது தலையை துண்டித்து அங்குள்ள வாணியங்குளம் மடை அருகே வைத்து விட்டு சென்றனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கொத்தங்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்த மகாராஜன் என்ற ராஜா (24), பாண்டி என்ற சியான் பாண்டி (35), டவுன் பாறையடியைச் சேர்ந்த சீதாராமகிருஷ்ணன் என்ற பப்பி (28) மற்றும் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜகுரு, மாரிமுத்து என்ற முத்து, மாரியப்பன் என்ற சிங்கம், சரவணகுமார், விக்னேஸ்வரன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த 2014-ம் ஆண்டு மகாராஜனின் தந்தை மந்திரம் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு பழிக்கு பழியாக கொலையாளிகளின் சமுதாயத்தைச் சேர்ந்த ஏதாவது ஒரு நபரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கர சுப்பிரமணியனை கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட 3-வது கூடுதல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், குற்றம் சாட்டப்பட்ட மகாராஜன் என்ற ராஜா, பாண்டி என்ற சியான் பாண்டி மற்றும் சீதாராமகிருஷ்ணன் என்ற பப்பி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் சரவணகுமார் உயிரிழந்தார். மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சூரசங்கரவேல் ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)

தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 100 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
திங்கள் 30, ஜூன் 2025 8:40:03 AM (IST)
