» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)
திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் மூலமாக, திருநெல்வேலி சுகாதார மாவட்டத்தில் நகர்ப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகர்நல மையங்களுக்கு கீழ்க்காணும் பணியிடங்கள் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
1. Medical Officer (Interview Post) 12
2. Staff Nurses (Non Interview Post) 12
3. Multi Purpose Health Worker (HI Gr-II) (Non Interview Post) 12
4. Hospital Worker / Support Staff (Non Interview Post) 12
இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானவை என்பதால் இதன் மூலம் நிரந்தர பணியோ, முன்னுரிமையோ சலுகைகளோ பிற்காலத்தில் கோர இயலாது. இதற்கான விண்ணப்பத்தினை https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 24.03.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக மாவட்ட சுகாதார அலுவலகம், எண்.16, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, சமாதானபுரம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)
