» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் கண்காணிப்புக்கூட்டம்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:17:05 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (22.04.2025) நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் (DISHA COMMITTEE) மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் குறித்து, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 34 வகையிலான பல்வேறு திட்டங்கள் குறித்து ஒவ்வொரு துறை ரீதியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), உயிர்நீர் இயக்கம் (ஜல் ஜீவன் திட்டம்), பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டம் குறித்தும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் ஊரகம் மற்றும் நகர்புறங்களில் சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், சமுதாய முதலீட்டு நிதி, வங்கி கடன் இணைப்பு, உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மாவட்டத்தில் செயல்படுத்திவரும் திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலன் கருதி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் மேலும், மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். இத்திட்டங்கள் அனைத்தும் சிறந்த முறையில் செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் விதத்தில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என குழுவின் தலைவர் மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் இலக்குவன், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:37:43 PM (IST)

வாரச்சந்தையில் பயங்கர தீ விபத்து: ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 5:35:42 PM (IST)

ஆட்டோக்களின் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்: ஆர்டிஓவிடம் கோரிக்கை!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 10:26:08 AM (IST)

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை இயக்கக்கூடாது: மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையால் பரபரப்பு
வெள்ளி 12, செப்டம்பர் 2025 8:42:46 AM (IST)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)
