» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் மீது தனியார் பஸ் மோதி ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 30, ஏப்ரல் 2025 9:34:52 PM (IST)
ராயகிரி பகுதியில் பைக் மீது தனியார் பஸ் மோதியதில் பைக்கில் ஒருவர் சம்பவ இடத்திலேய இறந்தார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார்.
தென்காசி மாவட்டம், சிவகிரி ராஜபாளையம் சாலையில் காருண்யா மருத்துவமனை அருகில் முன்னால் சென்ற தனியார் பஸ்ஸை பைக்கில் சென்ற நபர் முந்திச் செல்ல முயன்ற போது தனியார் பஸ் பைக் மீது மோதியது. இதில் தளவாய்புரம் அருகே உள்ள கிழக்கு முகவூர் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் நாடார் என்பவரது மகன் கண்ணன் (23) ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு வாழ வந்தாள்புரம் பகுதியைச் சார்ந்த ராஜாமணி மகன் கணேஷ் குமார் (29) இருவரும் ஒரு பைக்கில் வந்துள்ளனர்.
அப்போது தனியார் பஸ் மோதியதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கணேஷ்குமார் பலத்த காயங்களுடன் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த கணேஷ் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்.ஐ.சி. ஊழியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 14, ஜூலை 2025 8:46:24 AM (IST)

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை: 4 குழந்தைகள் பரிதவிப்பு
ஞாயிறு 13, ஜூலை 2025 10:59:59 AM (IST)

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
சனி 12, ஜூலை 2025 4:17:07 PM (IST)

ஆசிரியைகள் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!
சனி 12, ஜூலை 2025 3:38:39 PM (IST)

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)
