» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மயான வேட்டைக்கு சென்ற சாமியாடி திடீர் சாவு: நெல்லை அருகே பரபரப்பு!
ஞாயிறு 4, மே 2025 9:28:26 AM (IST)
நெல்லை அருகே கோவிலில் சாமியாடிய பக்தர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற மாடசாமி (55). இவர் அந்த பகுதியில் உள்ள சப்பாணி மாடசாமி கோவிலில் சாமியாடி வந்தார். நேற்று முன்தினம் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற பூஜையின்போது மாடசாமி சாமியாடினார். பின்னர் அவர் கோவிலில் இருந்து மயான வேட்டைக்கு புறப்பட்டு சென்றார்.
மயான வேட்டை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கோவிலுக்கு திரும்பிய மாடசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர், பக்தர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாடசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விரைந்து சென்று, மாடசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடசாமி ரத்த அழுத்த பாதிப்பால் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 11, ஜூலை 2025 4:08:36 PM (IST)

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் துவக்கி வைத்தார்
வெள்ளி 11, ஜூலை 2025 12:50:40 PM (IST)

சுங்கச்சாவடியில் டிரைவர், கண்டக்டர்களிடம் கையெழுத்து வாங்கி அரசு பஸ்களை அனுமதித்த ஊழியர்கள்
வெள்ளி 11, ஜூலை 2025 8:22:12 AM (IST)

குழந்தைகள் இல்லத்தில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
வியாழன் 10, ஜூலை 2025 5:06:20 PM (IST)

படகுகளில் தவெக பெயர் இருந்தால் மானியம் மறுப்பதா? திமுக அரசுக்கு விஜய் கண்டனம்!
வியாழன் 10, ஜூலை 2025 3:50:04 PM (IST)

புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நிதி உதவி : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஜூலை 2025 3:15:25 PM (IST)
