» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் அணுமின் நிலையங்களுக்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், கூடன்குளம் பகுதியில் அமைந்துள்ள அணுமின் நிலைய வளாகத்தில் அணுமின் நிலையத்தின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சிவில் பாதுகாப்பு மற்றும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நேற்று மாலை நடைபெற்றது.
அணுமின்நிலைய வளாகத்தில் போர்க்கால பாதுகாப்பு வழிமுறைகளில் முதல்கட்டமாக நிலைய அவசர கால அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து, நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அங்கிருந்து உடல் பரிசோதனை மேற்கொண்டு பாதுகாப்பான வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு, மருத்துவ உதவி தேவைப்படும் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு கூடன்குளம் அணுமின்நிலைய அருகிலுள்ள அனுவிஜய் நகரியம் அனைத்து வசதிகளுடன் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் உருவாக்கப்பட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது குறித்தும், அம்மருத்துவமனையின் அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளின் ஒத்திகையும் நடைபெற்றது.
மேலும், ஒவ்வொரு பிரிவுகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின்படி அவசர காலத்தில் செயல்படுகிறார்களா என்றும், பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா போன்று அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை எவ்வாறு மேற்கொண்டார்கள் என்பதனை அவசரகால கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரா.சுகுமார், வளாக இயக்குநர் சதீஸ்குமார், நிலைய இயக்குநர்கள் திருநாவுக்கரசு, ரமேஷ், திட்ட இயக்குநர் வெங்குசாமி ஆகியோர் கண்காணித்தனர்.
ஒத்திகையின் இறுதியில், கூடன்குளம் அணுமின் நிலையம் தேவையான அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக உள்ளது என உறுதிசெய்யப்பட்டது. இந்த ஒத்திகையில், தீயணைப்பு வீரர்கள், மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரர்கள், மருத்துவக்குழு அலுவலர்கள், மருத்துவர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வில், கண்காணிப்பாளர்கள் ரிச்சர்டு (பயிற்சி), தயாகர் (தரக்கட்டுப்பாடு), ஞானசம்மந்தம் (தொழில்நுட்ப சேவை), தலைமை பொறியாளர் வின்சென்ட், நிலைய சுகாதார இயற்பியலாளர் சஜீவ், துணை பொது மேலாளர் மனிதவளம், விஜயராணி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)
