» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு: வாலிபர் கைது!
சனி 10, மே 2025 12:44:11 PM (IST)
நெல்லை பணகுடியில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி, பெருங்காளியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது பெண்மணி நேற்று தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சமயத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் மூதாட்டியை தாக்கிவிட்டு, பாலியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் அந்த மூதாட்டியிடம் இருந்து சுமார் 2 பவுன் தங்கச் சங்கிலியை அந்த வாலிபர் பறித்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அதன் அடிப்படையில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்தார்.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவுப்படி, வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் 5 தனி படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளியை கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, போலீசார் குற்றவாளியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் இருந்து மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட தங்க சங்கிலி மீட்கப்பட்டது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்குற்ற சம்பவத்தில், சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்த வள்ளியூர் டி.எஸ்.பி. மற்றும் தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
ஞாயிறு 11, மே 2025 9:33:44 AM (IST)

நெல்லை, பாளை தொகுதிகள் அ.தி.மு.க.வுக்கு வேண்டும்: இபிஎஸ்க்கு தொண்டர்கள் கடிதம்!
சனி 10, மே 2025 12:51:20 PM (IST)

கூடன்குளம் அணுமின்நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை!
சனி 10, மே 2025 11:38:51 AM (IST)

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.36 லட்சம் கொள்ளை: பெண் உள்பட 10 பேர் கும்பல் கைது!
சனி 10, மே 2025 9:04:41 AM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 92.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
வியாழன் 8, மே 2025 12:51:53 PM (IST)
