» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 16, மே 2025 12:40:51 PM (IST)
நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழ முன்னீர் பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர் (45). இவர் பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் செல்வசங்கர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றது.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது அந்த கும்பல் டவுன் மேலநத்தம் பகுதியை சேர்ந்த பொன்ராஜ், பொன்னாக்குடியை சேர்ந்த கார்த்தி, முன்னீர்பள்ளத்தை சேர்ந்த இசக்கிமுத்து உள்பட 4 பேர் என்பது அடையாளம் தெரிந்தது.
இதனிடையே நெல்லை மாநகர பகுதியில் டவுன் வயல் தெரு பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிள் ஷோரூம் வாசலிலும் அதே கும்பல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதும், ஏர்வாடியில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரம் பறித்ததும் தெரியவந்தது.
அந்த கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் சார்பில் 6 தனிப்படைகள், மாநகரில் துணை போலீஸ் கமிஷனர் கீதா மேற்பார்வையில் 1 தனிப்படை என மொத்தம் 7 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த கும்பல் சந்திப்பு ரெயில்நிலையத்தில் இருந்து ரெயில் மூலமாக கேரளா தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாநகர போலீஸ் தனிப்படை கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு விரைந்தது. அங்கு நேற்று காலை முதல் முகாமிட்டு தீவிரமாக தேடிய நிலையில் நேற்று இரவு திருவனந்தபுரத்தில் ஒரு விடுதியில் பதுங்கி இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை இன்று காலை நெல்லைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து எதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

வீடு புகுந்து மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்
புதன் 9, ஜூலை 2025 9:02:53 AM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம்: திருநெல்வேலியில் கோலாகலம்
செவ்வாய் 8, ஜூலை 2025 11:39:30 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஜூலை 2025 7:53:08 AM (IST)

மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ.18.66 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 7, ஜூலை 2025 5:04:07 PM (IST)

திருட்டுமே 16, 2025 - 02:51:48 PM | Posted IP 104.2*****