» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் அழைப்பு
வியாழன் 22, மே 2025 4:09:30 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியார் ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஜடிஜ) நடப்பு ஆண்டில் மாணவர்கள் சேர, உதவி மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டிற்கான அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வெல்டர், பிளம்பர், வயர்மேன் போன்ற பிரிவுகளுக்கு 8ம் வகுப்பிலும், எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏசி மெக்கானிக், COPA மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட 4.O பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், மொபைல் எண், இமெயில் ஜடி, ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, பேட்டை, அம்பாசமுத்திரம், இராதாபுரம் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களிலும் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பேட்டை, திருநெல்வேலியிலும் உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-மட்டும் டெபிட் கார்டு, ஜிபே அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக்கருவி, காலணி, பஸ் பாஸ் மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கு தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகை வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும். மகளிருக்கு வயது வரம்பு 14 மற்றும் உச்சவரம்பு இல்லை மற்றும் ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை. விருப்பமுடையவர்கள் வரும் ஜுன் 13ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 8903709298, 9486251843, 9499055790 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தகவல்!
புதன் 17, செப்டம்பர் 2025 3:53:47 PM (IST)

பேரீச்சம்பழத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து சிறையில் மகனுக்கு கொடுக்க வந்த பெண் கைது!
புதன் 17, செப்டம்பர் 2025 11:04:28 AM (IST)

நெல்லை ரயில் நிலையத்தில் வடமாநில வாலிபர் தாக்குதல்: 3 பயணிகள் காயம்!
புதன் 17, செப்டம்பர் 2025 10:38:38 AM (IST)
