» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு: நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள்
புதன் 17, செப்டம்பர் 2025 10:31:00 AM (IST)
புரட்டாசி சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் (செப்.20, 27, அக்.4, 11) நவதிருப்பதி திருக்கோயில்களுக்கு பக்தா்கள் சென்று, வர சிறப்பு சேவை பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சிறப்புப் பேருந்துகள், புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நவதிருப்பதி திருத்தலங்களான ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, தென் திருப்பேரை, திருக்கோளூா், ஆழ்வாா்திருநகரி ஆகிய இடங்களுக்கு சென்று இரவில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து சேரும்.
பயணக் கட்டணம் நபருக்கு ரூ.500 வசூலிக்கப்படும். புதிய பேருந்து நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டணத் தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் www.arasubus.tn.gov.in/ மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல், புரட்டாசி சனிக்கிழமைகளில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து திருவேங்கடநாதபுரம், கருங்குளம், எட்டெழுத்து பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனியாகவும், வள்ளியூா்-திருக்குறுங்குடி, வீரவநல்லூா்- அத்தாளநல்லூா் இடையேயும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 79049 06730, 99944 62713 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

ஆட்சி மாற்றத்துக்காக பிரசாரம் செய்வேன்: நெல்லையில் சரத்குமார் பேட்டி
திங்கள் 22, டிசம்பர் 2025 4:42:33 PM (IST)

