» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
படி... படி... என்று கூறியதால் தந்தையின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கல்லூரி மாணவர்!
வியாழன் 26, ஜூன் 2025 8:59:08 AM (IST)
மேலப்பாளையம் அருகே படி... படி... என்று கூறியதால் தந்தையின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் அருகே மேலகருங்குளம் அசோகபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுக்கு தங்கபாண்டி (19) உள்ளிட்ட 3 பிள்ளைகள் உள்ளனர். மாரியப்பன் ஆடுகள் வளர்த்து வந்தார். தங்கபாண்டி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் சரியாக படிக்காமல் ஊர்சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, மாரியப்பன் அடிக்கடி தங்கபாண்டியிடம் நன்றாக படிக்குமாறு அறிவுறுத்தி கண்டித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் மாரியப்பன் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவர் தங்கபாண்டியிடம், ‘‘ஒழுங்காக படிக்கும் வேலையை மட்டும் பார், மற்றவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்து’’ என்று அறிவுறுத்தினார்.
இதனால் தந்தை-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட பிறகு தூங்க சென்றனர். மாரியப்பன் வீட்டுக்கு வெளியே வராண்டாவில் படுத்து தூங்கினார். தந்தை அடிக்கடி படி... படி... என்று கூறி கண்டித்ததால் ஆத்திரமடைந்த தங்கபாண்டி அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அவர் வீட்டின் வெளியே ஆடுகளை கயிற்றில் கட்டுவதற்காக வைத்திருந்த பெரிய கல்லை எடுத்து வந்து, தூங்கி கொண்டிருந்த தந்தை மாரியப்பனின் தலையில் போட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மாரியப்பனின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த குடும்பத்தினர் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின்னர் தங்கபாண்டி அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தங்கபாண்டியை வலைவீசி தேடினர்.
இந்த நிலையில் வெளியூர் செல்வதற்காக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த தங்கபாண்டியை போலீசார் பிடித்து கைது செய்தனர். படி... படி.. என்று கூறியதால் தந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கல்லூரி மாணவர் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
