» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள்/ மையங்கள்( Mental Health Establishments ) செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள்/ அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017 – ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாறு பதிவு பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டிய அலவலகம் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010. தொலைபேசி எண் 044 -2642 0965, Email :[email protected] மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய இணையதள முகவரி https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php
மனநல மையங்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை மேற்காணும் இணையதள முகவரியிலோ தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 044 – 2642 0965 – என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இதன்படி, பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள்/ நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் மேற்காணும் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு , உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)

வடக்கு பச்சையாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:35:42 PM (IST)

சங்கரன்கோவிலில் முன்னாள் கவுன்சிலர் மகன் கொலை: உறவினர்கள் மறியல்!!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 12:05:02 PM (IST)

நெல்லை மாவட்டத்திற்கு ரூ.21,822.19 கோடி முன்னுரிமைத் துறை கடன் வாய்ப்பு - ஆட்சியர் தகவல்!
வியாழன் 5, பிப்ரவரி 2026 5:38:55 PM (IST)

