» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வியாழன் 26, ஜூன் 2025 3:54:36 PM (IST)
மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மாநில விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
 மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு தமிழக முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்ட் 2025 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.
 1. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்
 2. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
 3. மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
 4. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப் பணியாளர் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
 5. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்
 மேற்காணும் விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் விருதாளர்கள்,” https://awards.tn.gov.in” என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 30.06.2025க்குள் விண்ணப்பிக்கலாம். வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
  மேலும் விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 30.06.2025 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  மேலும், மேற்படி விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக்குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்வில் முதலமைச்சர் அவர்களால் மாநில விருதுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார். 
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மதுரை ரயில்வே கோட்டத்தை சென்னை தேர்வு வாரியத்துடன் இணைக்க வேண்டும்: முதல்வரிடம் கோரிக்கை!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:37:06 AM (IST)

நெல்லை அருகே வாலிபர் கழுத்தை இறுக்கி படுகொலை : அக்காள் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:22:08 AM (IST)

நெல்லையப்பர் கோவிலுக்கு குட்டி யானை வாங்குவதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
வியாழன் 30, அக்டோபர் 2025 8:24:50 AM (IST)

தற்காலிக மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய 2 மின்வாரிய அதிகாரிகளுக்கு சிறை தண்டனை
வியாழன் 30, அக்டோபர் 2025 8:17:13 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் : சபாநயாகர் அப்பாவு ஆய்வு
புதன் 29, அக்டோபர் 2025 4:26:53 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் நவ.1-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
புதன் 29, அக்டோபர் 2025 11:37:25 AM (IST)




