» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்திற்கு கடன் இலக்கீடாக ரூ.20360.78 கோடி நிர்ணயம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 27, ஜூன் 2025 12:44:55 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார், தலைமையில் நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத்தின் 2025-26 நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை புத்தகத்தினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.
நமது மாவட்டத்தின் 2025-26 நிதி ஆண்டு முன்னுரிமை கடன் இலக்கீடாக ரூ.20360.78 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாய கடன் இலக்கு ரூ.16793.65 கோடியும், தொழில் கடன் இலக்கு ரூ.2862.15 கோடியும், கல்விக்கடன் இலக்கு ரூ.34.02 கோடியும், வீட்டுக்கடன் இலக்கு ரூ.215.48 கோடி மற்றும் இதர முன்னுரிமை கடன் இலக்காக ரூ.455.48 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார் தெரிவித்தார்.
மேலும் தற்போது வங்கிகளில் நிலுவையில் உள்ள கடன் விண்ணப்பங்களை விரைவாக வழங்கிடவும், விவசாயம், கால்நடை மற்றும் மீன்வளம் சார்ந்த கடன்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும், மேலும் வாழ்வாதார கடன்கள், சுய உதவி குழு கடன்கள் மற்றும் கல்வி கடன்கள் ஆகியவற்றை வங்கிகள் சிறப்பாக வழங்கி, நமது மாவட்டத்திற்கான முன்னுரிமை கடன் இலக்கீட்டினை எய்திட மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கணேஷ் மணிகண்டன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) இலக்குவன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திர.சசிகுமார், மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் பாஸ்கரன், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் குருசாமி, தமிழ்நாடு கிராம வங்கியின் மண்டல மேலாளர் கௌரி சங்கர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் மீனா, பால்வளத்துறை துணை இயக்குநர் மரு.சைமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பூவண்ணன், தாட்கோ மேலாளர் சுதா, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் (பொ) முருகன், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் சங்கரசுப்பிரமணியன், கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குநர் பிரவின்குமார், அனைத்து வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)

நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா: 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 4:18:44 PM (IST)

விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் சாவு: ஏர்வாடி அருகே பரிதாபம்!
திங்கள் 30, ஜூன் 2025 11:50:02 AM (IST)

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
திங்கள் 30, ஜூன் 2025 10:46:39 AM (IST)

குற்றாலத்தில் சீசன் களைகட்டியது: அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!!
திங்கள் 30, ஜூன் 2025 8:45:44 AM (IST)
