» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)



திருநெல்வேலியில் விதிமுறைகளை பின்பற்றாமல் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் அவர்களின் உத்தரவுப்படி இன்று காலை திருநெல்வேலியிலிருந்து அம்பை செல்லும் மெயின் ரோட்டில், முன்னீர் பள்ளம் காவல் நிலையம் முன்பாக காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பள்ளிக்கு குழந்தைகளை எடுத்து செல்லும் மூன்று சக்கர வாகனங்களை சோதனை செய்து, ஓட்டுநர் இருக்கை அருகே மாணவர்களை அமர வைத்தும் மற்றும் வாகனத்தின் பின்னால் கால்களை தொங்க விட்டபடி அழைத்துச் செல்லும் வாகனத்தையும், வேகமாகவும், முறையான சீருடை அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தியும், எச்சரிக்கை செய்தும், விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அனுப்பி வைக்கப்பட்டது. சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ நிறுத்தப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory