» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களை வரன் முறைப்படுத்தும் திட்டம்: ஆட்சியர் தகவல்!

புதன் 9, ஜூலை 2025 3:18:30 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-ற்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு, வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக 01.07.2025 முதல் 30.06.2026 வரை ஓராண்டு காலம் காலநீட்டிப்பு செய்து, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அரசாணை எண். 92 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் (ந.வ(3)) துறை, நாள் 26.06.2025-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு கட்டப்பட்டுள்ள அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப் பகுதியில் (HACA) அமையும்பட்சத்தில் அரசு கடிதம் எண் 15535/ந.வ4(3)/2019, நாள் 18.02.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். மேலும், இந்த வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

M BabuJul 10, 2025 - 07:47:36 AM | Posted IP 104.2*****

open agalayeeee

M BabuJul 10, 2025 - 07:37:26 AM | Posted IP 162.1*****

TNEB RTO WEBSITE MATHIRI WORK AGUMA ILLAI MAKKAL USE PANRA MATHIRUI IRUKUMA INTHA WEBSITE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory