» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேச்சு

வியாழன் 10, ஜூலை 2025 10:14:04 AM (IST)



திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார். 

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் 2026 தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பேசுகையில் "நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆரை தவிர யாரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது இல்லை. 

இன்றைய நிலைக்கு பாஜக மட்டும் தான் நம்முடைய கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரவுள்ளன. சரியான கூட்டணி அமையும். திமுக கூட்டணி உடையும், ஆட்சி, கூட்டணி இருந்தும் தமிழக முதல்வர் தொகுதி வாரியாக  வேலை பார்க்கிறார். அவர்கள் இவ்வளவு கீழ இறங்க வேண்டிய அவசியம் இல்லை. அது ஒருபுறம் இருந்தாலும் நம்முடைய கடமை நாம் செய்ய வேண்டும் 

விடியா திமுக ஆட்சி வீட்டிற்கு போக வேண்டும் என்று மக்கள் மனதில் நூற்றுக்கு நூறு இருக்கிறது. அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராக வர வேண்டும் என்று சொல்லியாச்சு டெல்லி மத்திய அரசு பச்சைக் கொடி காட்டி, நம்மை விட ஆர்வமாக இருக்கிறார்கள். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக முழு ஆதரவு கொடுக்கின்றனர். பாஜகவும் நம்முடன் முழு ஒத்துழைப்புடன் இருந்து வருகின்றனர்  என்றார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJul 10, 2025 - 02:45:05 PM | Posted IP 172.7*****

எப்படித்தான் இவங்களுக்கு தின்ன சோறு செமிக்குதுன்னு தெரில. பாஜகவை பத்தி இவனுக பேசுனதுக்கு கணக்கு கிடையாது. இன்னைக்கு உத்தமர்கள் மாதிரி பேசுறானுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory