» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவில்பட்டி மைக்ரோகிரின் வளர்ப்பு ஆர்வலருக்கு பால பிரஜாபதி அடிகளார் பாராட்டு!

வியாழன் 10, ஜூலை 2025 3:05:12 PM (IST)



கோவில்பட்டியில் மைக்ரோகிரின் வளர்ப்பு ஆர்வலருக்கு சுவாமிதோப்பு பதியின் பட்டத்து தலைவர் பால பிரஜாபதி அடிகளார் பாராட்டு தெரிவித்தார். 

கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற வேளாண் அறிவியல் கல்வி ஆசிரியர் கோ. சுரேஷ்குமார் என்பவர் குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சி தரும் நுண் கீரைகள் (மைக்ரோகிரின்) வீட்டில் வளர்க்கும் தகவல் குறித்து கட்டுரை மற்றும் நாளிதழ் செய்திகளை பார்வையிட்ட தமிழக அரசின் 2003-ம் ஆண்டின் மத நல்லிணக்கத்துகான "கோட்டை அமீர்" விருதாளர் கன்னியாகுமாரி மாவட்டம் சுவாமிதோப்பு பதியின் பட்டத்து தலைவர் அய்யா பால பிரஜாபதி அடிகளார் கோவில்பட்டிக்கு நேரில் வருகை தந்து மைக்ரோகிரின் வளர்ப்பு செயல்பாடு முறைகளை ஆய்வு செய்து பாராட்டி, குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் ஆசி வழங்கி பாராடினார். 

நாமே வீட்டிலேயே மிக எளிதாக வளர்த்து, தினசரி உணவில் இந்த நுண் கீரைகளை பச்சையாக சேர்த்தால் ஆரோக்கியமான உடல் நலம் பெறலாம்  என்ற கருத்தை எல்லோரும் அறிய செய்ய தங்களின் ஆர்வமான செயல்பாடு இருக்க வேண்டும் என்று வாழ்தினார்.


மக்கள் கருத்து

G. SureshkumarJul 10, 2025 - 03:11:18 PM | Posted IP 104.2*****

🙏❤️❤️❤️🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory