» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருச்செந்தூர் கோயிலில் மகாராஷ்டிர ஆளுநர் தரிசனம்

சனி 12, ஜூலை 2025 7:36:43 AM (IST)



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த அவரை, கோட்டாட்சியர் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமார், கோயில் நிர்வாகத்தினர் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து அவர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தார். 

பின்னர், கோயில் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் ஆளுநர் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசு அதிக சிரத்தை எடுத்து குடமுழுக்கை நடத்தி இருக்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்னவர்கள் கூட கடவுளை வணங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.

அப்போது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்டத் தலைவர்கள் முத்துபலவேசம் (திருநெல்வேலி), தூத்துக்குடி தெற்கு சித்ராங்கதன், நவமணிகண்டன், திருச்செந்தூர் நகரத் தலைவர் செல்வகுமரன், நகரப் பொருளாளர் பலவேச கண்ணன், நிர்வாகிகள் வினோத் சுப்பையன், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

முன்னாள் தூத்துக்குடிJul 12, 2025 - 01:20:24 PM | Posted IP 172.7*****

நயினார் இருந்தால் பிஜேபி வளர்ச்சி குறையும் , திராவிட கட்சிகள் லாபம் பெறும் . அண்ணாமலை இருந்தால்தான் பிஜேபி வளர்ச்சி பெறும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory