» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் காவலர் கைது

புதன் 16, ஜூலை 2025 8:16:06 AM (IST)

திருச்செந்தூரில் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சேர்ந்தவர் மிகாவேல். இவர், சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு மிகாவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஆறுமுகநேரியில் இவர் பணியாற்றிய போது, அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்தார். அதன்பேரில், மிகாவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து இவரை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து

NAAN THAANJul 18, 2025 - 10:52:17 AM | Posted IP 172.7*****

ஆறுமுகநேரி பூவரசூரைச் சேர்ந்தவர் மிகாவேல். இவர், சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு மிகாவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவனெல்லாம் ஏன் டிபார்ட்மென்ட் ல வச்சு நக்குறீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory