» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சட்டப்பணி ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் : நீதிபதி பங்கேற்பு
வெள்ளி 18, ஜூலை 2025 11:36:25 AM (IST)

கூத்தன்குழி பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குபேர சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நெல்லை மாவட்டம், கூத்தன்குழி பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரியில் ராதாபுரம் தாலுகா சட்டப் பணிக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாமில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி குபேர சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், சட்டப்பணி ஆணைக்குழு மூலம் கல்லூரிகளில் ராகிங் செய்தால் சட்டத்தில் என்னென்ன வழிமுறைகள் உள்ளது என்பதை மிகவும் எளிமையாக எடுத்துரைத்தார்.
மேலும், சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரி அருட்தந்தை லூர்து ஜெயராஜ், அருட்தந்தை ஆல்பர்ட் ஜான்சன், முதல்வர் கண்ணன் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வழக்கறிஞர் இசக்கியப்பன், செயலாளர் கந்தசாமி, மற்றும் ஜெயாபிரின்சஸ், தனசேகர், செல்லத்துரை, ஆகிய வழக்கறிஞர்கள் சட்டப்பணி ஆணைக்குழுவின் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை டோமினிக், வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் ராஜேஷ் , வழக்கறிஞர்கள் ராயர், மனோராஜ், பொன்ராஜ், சங்கரி, சுந்தரம், கூடங்குளம் காவல் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாலுகா சட்டப்பணி ஆணைக்குழு நிர்வாக உதவியாளர் லெட்சுமி செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை: தனியார் பள்ளி பஸ்கள் தீவைத்து எரிப்பு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:48:22 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : தெக்ஷண மாற நாடார் சங்கம்
வியாழன் 17, ஜூலை 2025 4:51:08 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: சபாநாயகர் பேட்டி
வியாழன் 17, ஜூலை 2025 3:41:27 PM (IST)

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வியாழன் 17, ஜூலை 2025 11:27:01 AM (IST)
