» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
4-ம் திருவிழாவான 21-ம்தேதி (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 27-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
அப்போது காந்திமதி அம்மனை கர்ப்பிணி பெண் போல் அலங்கரித்து மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டிவைத்து வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் படைக்கப்படும் தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார்.
அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயிரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த சிறுபயிரை குழந்தை இல்லாத பெண்கள் வாங்கி சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இந்த சிறுபயிரை வாங்க பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதற்காக குழந்தை இல்லாத பெண்கள் அம்மன் சன்னதியில் கொடியேறிய பின்பு 10 நாட்களும் விரதம் கடைபிடித்து வருவார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




