» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை ரயில் நிலைய யார்டு பராமரிப்பு பணி: ஆகஸ்ட் 20ம் தேதி 6 ரயில்கள் ரத்து!
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:11:20 AM (IST)
நெல்லை சந்திப்பு ரயில் நிலைய யார்டு பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி காரணமாக வருகிற ஆகஸ்ட் 20ந் தேதி புதன்கிழமை 6 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லையில் இருந்து காலை 10.20 மணிக்கு திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56729 முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்தூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக வாஞ்சி மணியாச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் வண்டி எண் 56732 திருச்செந்தூர் நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும் பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16731 மற்றும் திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி எண் 16732 ஆகிய 2 ரயில்களும் ஆகஸ்ட் 20ந் தேதி கோவில்பட்டி திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அன்று அந்த ரயில் வண்டி எண் 16732 திருச்செந்தூரில் புறப்படுவதற்கு பதிலாக கோவில்பட்டியில் இருந்து மதியம் 2:33 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும்.
மேலும் செங்கோட்டை - நெல்லை ரயில் வண்டி எண் 56742 மற்றும் நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் வண்டி எண் 56743 ஆகிய 2 ரயில்களும் சேரன்மகாதேவி நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் வண்டி எண் 56743 சேரன்மகாதேவியில் இருந்து மதியம் 2:02 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




