» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
விபத்தில் படுகாயம் அடைந்த வேதனை: ரயில் முன் பாய்ந்து நெல்லை வாலிபர் தற்கொலை!
ஞாயிறு 24, ஆகஸ்ட் 2025 7:42:16 PM (IST)
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயம் அடைந்த வேதனையில் இருந்த வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் நாங்குநேரி நெடுங்குளம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். அவரது கை மற்றும் உடல் பாகங்கள் சுமார் 200 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.
இதுகுறித்து ரயில் என்ஜின் டிரைவர் நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்தவர் நாங்குநேரி அருகே உள்ள தெற்கு கரந்தாநேரியை சேர்ந்த தேவதாஸ் மகன் ஜெகித் (வயது 23) என்பது தெரியவந்தது.
இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். விடுமுறை கோவையில் இருந்து நாங்குநேரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்துள்ளார். அப்போது வழியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பின்பு வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.
இந்த விபத்துக்கு பிறகு அவர் அடிக்கடி தனக்கு தலை வலிப்பதாகவும், தற்கொலை செய்யப்போவதாகவும் கூறி வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் படுகாயம் அடைந்ததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




