» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சமூக வலைதளத்தில் சினிமா பாடல் மூலம் அச்சுறுத்திய ரவுடிக்கு போலீசார் நூதன தண்டனை

திங்கள் 1, செப்டம்பர் 2025 8:19:07 AM (IST)

தூத்துக்குடியில் சமூக வலைதளத்தில் சினிமா பாடல் மூலம் அச்சுறுத்திய ரவுடிக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினார்.

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்ற எலி ராஜா (27). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். அதனை ஒரு வீடியோவாக பதிவிட்டு சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தாா்.

அந்த வீடியோவில், ‘‘யாரா வேணாலும் இரு, நம்ம லைனில் கரெக்டா இரு, திரையரங்கம் சிதறட்டும், இவன் பெயர் முழுக்க களைக்கட்டும், சிறுசுங்க எல்லாம் கதறட்டும், விசில் பறக்கட்டும், நரகத்துக்கே தெரியட்டும், அந்த எமனுக்குமே புரியட்டும், உலகத்துக்கே கேட்கட்டும்’’ என்ற ‘குட் பேட் அக்லி’ திரைப்பட பாடலின் பின்னணியில் அந்த வீடியோ அமைந்து இருந்தது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் இந்த வீடியோவை அவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதாக ராஜா உள்ளிட்ட சிலரை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர். மேலும் வீடியோ வெளியிட்டது தொடர்பாக, ராஜா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரையும் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தின் முன்பு நிற்க வைத்து போலீசார் நூதன தண்டனை விதித்தனர்.

அதாவது ‘‘ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’’ என்ற திருக்குறளை ராஜா உள்பட 3 பேரையும் நன்றாக வாசிக்க சொல்லியும், அதன் பொருளை விளக்கி கூறச் சொல்லியும், போலீசார் வீடியோ பதிவு செய்தனர். மேலும் அந்த வீடியோவை சமூக வலைதங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகளும் தற்போது வேகமாக பரவி வருகிறது. நூதன தண்டனைக்கு பிறகு ராஜாவை தவிர மற்ற 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.


மக்கள் கருத்து

naan thaanSep 1, 2025 - 12:35:19 PM | Posted IP 104.2*****

ராஜா என்ற எலி ராஜா (27). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வருகின்றனர் enna lachanamoo

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory