» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியை எழில்மிகு சுகாதாரமான மாநகராக மாற்றுவேன்: ஆணையர் பிரியங்கா பேட்டி!

திங்கள் 1, செப்டம்பர் 2025 10:21:01 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா பொறுப்பேற்றுக் கொண்டார். 

தூத்துக்குடி மாநகராட்சியின் 17வது மாநகராட்சி ஆணையராக எஸ். பிரியங்கா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது "இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை வர உள்ளதால் வெள்ள தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவேன். குப்பைதான் ஒரு பிரச்னையாக உள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். 

இது சம்பந்தமாக மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி அழகுபடுத்தப்படும். மாநகராட்சிக்கு என்ன தேவையோ, மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து நிறைவேற்றுவேன் என்றார். 

முன்னதாக மாநகராட்சி ஆணையரை உதவி பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர், ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ்.சுரேஷ் குமார் ஆணையருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி புதிய ஆணையர் பிரியங்கா, ஏற்கனவே திருவாரூரில் கூடுதல் ஆட்சியராகவும், பொள்ளாச்சியில் உதவி ஆட்சியராகவும் இருந்து வந்துள்ளது குறிப்பிடதக்கது. 

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா, மரியாதை நிமித்தமாக அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

மக்கள் கருத்து

MAKKALSep 2, 2025 - 02:53:51 PM | Posted IP 172.7*****

ஆணையர் அவர்களுக்கு, தயவுசெய்து பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடித்து எல்லா தெருக்களுக்கு தார்ச்சாலை போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். கதிர்வேல் நகர், சிவஜோதி நகர், முத்துகிருஷ்ணாபுரம், வேலவன் நகர், அன்னைதெரசா நகர், பால்பாண்;டி நகர், புஷ்பா நகர், பாரதி நகர், பிஎன்டி காலனி, மேற்சொன்ன எந்த பகுதிகளுக்கு சென்றாலும் பாதாளச் சாக்கடைக்கு தெருவைத் தோண்டி சாலைகள் குண்டும் குழியுமாக பள்ளம் தோண்டுபவர்கள் போட்டு விட்டு செல்கிறார்கள். அநேகர் இங்கு தினமும் பள்ளத்தில் விழுகிறார்கள். மண் சரிக்கி வண்டியில் இருந்து பள்ளிக்குழந்தைகள் கீழே தினமும் விழுகிறார்கள். தயவு செய்து பாதாளச் சாக்கடை திட்டம் முடிந்த பகுதிகளில் பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்களின் நலன் கருதி சாலைப்பணியை சீக்கிரம் முடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

MAKKALSep 2, 2025 - 02:51:21 PM | Posted IP 104.2*****

MP RameshSep 2, 2025 - 06:26:08 AM | Posted IP 104.2*****

தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி கிராமத்திற்குபேருந்துகள் மிக குறைவாக உள்ளது அதை ஆணையாளர் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் மேலும் பேருந்துகள்இயக்க ஆவணம் செய்ய வேண்டும்

LoosuSep 1, 2025 - 09:43:18 PM | Posted IP 162.1*****

மாறும் ஆனால் மாறாது, கமிஷ்னர் தான் மாறுவீர்கள் தூத்துக்குடி மாநகர யாராலும் மாத்த முடியாது! முன்னாள் கலெக்டர் ஆஷிஸ்குமாரத் தவிர

R.KrishnarajSep 1, 2025 - 12:02:28 PM | Posted IP 162.1*****

தயவு செய்து ஏதாவது செய்து எங்கள் தூத்துக்குடி மக்களுக்கு உதவுங்கள். 1. குடிநீர் பிரச்சனையை தீர்த்துவையுங்கள் 2. எனக்கு தெரிந்து மோசமான திறந்த வெளி சாக்கடைகளில் நம்பர் ஒன் மாநகராக இந்தியாவில் இருப்பது போல உணர்கிறோம். சரி செய்யுங்கள் 3. மாநகர பஸ் போக்குவரத்து இவளவு குறைந்த அளவில் இருக்கும் மாநகருக்கு தூத்துக்குடிதான் ( இந்த விஷயத்தில் அருகில் இருக்கும் திருநெல்வேலியை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்) 4. சாலை மற்றும் சிறிய தெருக்களில் பெரும்பாலானவற்றை வசிக்கும் மக்களும் கடைகளும் ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுங்கள். 5.மேலிடத்தில் உரியமுறையில் மேலிடத்தின் கவனத்தில் கொண்டுவந்து கூடுதல் ரயில் வசதிகள் வர ஏற்பாடு செய்யுங்கள். சென்னைக்கு செல்ல இன்னும் ஒரே ரயிலை நம்பியிருப்பது கொடுமை. குறைந்த பட்ஷம் முத்துநகர் ரயிலில் விருது நகர் வரையிலான நிறுத்தங்களை தவிர்த்தால், தூத்துக்குடி மக்களுக்கு கூடுதல் இருக்கைகள் கிடைக்கும். கோவில்பட்டி - விருதாநகர் மக்களுக்கு நிறைய ரயில்கள் இருக்கிறது.

R.KrishnarajSep 1, 2025 - 12:02:05 PM | Posted IP 104.2*****

R.KrishnarajSep 1, 2025 - 12:01:55 PM | Posted IP 162.1*****

தமிழ்ச்செல்வன்Sep 1, 2025 - 11:01:29 AM | Posted IP 162.1*****

போகப் போக பார்க்கத்தானே போறோம்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.

மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Tirunelveli Business Directory