» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அமெரிக்காவின் வரித்தாக்குதலை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

திங்கள் 1, செப்டம்பர் 2025 9:08:32 PM (IST)



அமெரிக்காவின் வரித்தாக்குதலை கண்டித்து தூத்துக்குடியில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலஸ்தீன மக்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்திய துணையோடு இஸ்ரேல் நடத்தி வரும் இன அழிப்பு யுத்தத்தை கண்டித்தும், இந்தியா மீதும் இதர மூன்றாம் உலக நாடுகள் மீதும் அமெரிக்காவின் வரித்தாக்குதலை கண்டித்தும் சிஐடியு தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் அண்ணா நகரில் சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. பேச்சி முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் எஸ். அப்பாதுரை, மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டத் தலைவர் வை.பாலு ஆகியோர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவ, பொருளாதார மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர். சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர். ரசல் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். 

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பொருட்களான நகைகள், பட்டை தீட்டப்பட்ட வைரம், பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், திருப்பூர், கோவை, கரூர் மாவட்டங்களில் 12.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 500 டன் கடலுணவு பொருட்களை அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஏற்க மறுத்து விட்டதால் ஒவ்வொன்றும் ரூ.90 லட்சம் மதிப்புள்ள சரக்குகளுடன் 60 கண்டெயினர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது. 

இதனால் தமிழக கடலுணவு ஏற்றுமதியாளர்கள் குறிப்பாக தூத்துக்குடி கடலுணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு பெரும் பொருள் இழப்பு ஏற்படும் என்றும் இதனால் 20000 கடலுணவு பதப்படுத்தும் நிறுவன ஊழியர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என்றும் கடலுணவு ஏற்றுமதி மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட நிவாரணம் வழங்குவதுடன் மாற்று வணிக வாய்ப்புகளை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை அமெரிக்க சந்தையில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கும்படியும் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் த. முனியசாமி, கே. மணவாளன், ரவிதாகூர், மாரியப்பன், சிவபெருமாள், குன்னிமலையான், மீனவர் சங்க மாவட்ட செயலாளர் லேனஸ் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கட்சி தூத்துக்குடி புறநகர செயலாளர் முனியசாமி உள்ளிட்டு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

ஏம்பாSep 2, 2025 - 02:01:58 PM | Posted IP 172.7*****

அமெரிக்கா ல போய் டிரம்ப் வீட்டு வாசலில் இருந்து போராட வேண்டியது தானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory