» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சின்னகண்ணுபுரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:05:36 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி சின்னகண்ணுபுரம் பகுதியில் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் சில நாள்களுக்கு முன்பு மழைநீர் செல்வதற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்பணியின் போது இருந்த 15 அடி ரோடு 7 அடியாக மாறியது. இதனால் அந்த சாலையில் செல்லும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,பொதுமக்கள்,வியாபாரிகள் என பலருக்கு விபத்துக்கள் நேரிடுகிறது. 

2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் இந்த சாலை அதிகளவில் பாதிக்கப்பட்ட பொழுது இதனை சரி செய்யவில்லை. மேலும் தற்பொழுது இச்சாலை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது ஆகையால் இதில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

MAKKALSep 2, 2025 - 02:52:34 PM | Posted IP 172.7*****

ஆணையர் அவர்களுக்கு, தயவுசெய்து பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக முடித்து எல்லா தெருக்களுக்கு தார்ச்சாலை போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். கதிர்வேல் நகர், சிவஜோதி நகர், முத்துகிருஷ்ணாபுரம், வேலவன் நகர், அன்னைதெரசா நகர், பால்பாண்;டி நகர், புஷ்பா நகர், பாரதி நகர், பிஎன்டி காலனி, மேற்சொன்ன எந்த பகுதிகளுக்கு சென்றாலும் பாதாளச் சாக்கடைக்கு தெருவைத் தோண்டி சாலைகள் குண்டும் குழியுமாக பள்ளம் தோண்டுபவர்கள் போட்டு விட்டு செல்கிறார்கள். அநேகர் இங்கு தினமும் பள்ளத்தில் விழுகிறார்கள். மண் சரிக்கி வண்டியில் இருந்து பள்ளிக்குழந்தைகள் கீழே தினமும் விழுகிறார்கள். தயவு செய்து பாதாளச் சாக்கடை திட்டம் முடிந்த பகுதிகளில் பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்களின் நலன் கருதி சாலைப்பணியை சீக்கிரம் முடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory