» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ஆய்வு

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:18:20 PM (IST)



தூத்துக்குடி பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை  மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை  மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நுண்ணூர செயலாக்க மையத்தின் செயல்பாட்டினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மடத்தூர் பான் செக்கர்ஸ் துவக்க பள்ளியில் நடைபெற்ற  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


மக்கள் கருத்து

சந்திரன்Sep 2, 2025 - 06:37:10 PM | Posted IP 172.7*****

கண்ணில் கருப்பு கண்ணாடி போட்டால் எல்லாம் ஒன்றும் தெரியாது கண்ணாடியை கழட்டி பார் புரியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory