» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிபிஐ அதிகாரி என்று கூறி ரூ.50 லட்சம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது!

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 6:59:32 PM (IST)

தூத்துக்குடியில் சிபிஐ அதிகாரி என்று கூறி 50 லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு மர்ம நபர்கள் WhatsApp காலில் தொடர்பு கொண்டு தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி மேற்படி மூதாட்டியிடம் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி கணக்கு உள்ளதாகவும் அதில் மனிதகடத்தல் வழக்கில் ரூபாய் இரண்டு கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறி, மனித கடத்தல் வழக்கில் கைது செய்யாமல் இருக்க 50 லட்சம் பணத்தை மூதாட்டியிடம் நூதன முறையில் மோசடி செய்த வழக்கில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு ஏற்கனவே 5பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மேற்படி மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உதயகாந்த் ஜைஸ்வால் மகன் ரிது ராஜ் ஜைஸ்வால் (43) என்பவரை கடந்த 28.08.2025 அன்று ஜார்கண்ட் மாநிலம் சென்று கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (02.09.2025) சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று சிபிஜ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி நடைபெற்றுவருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை உடனடியாக துண்டித்துவிடவும், மேலும் சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக புகார் எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory