» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அவசர கால ஒத்திகை : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
புதன் 3, செப்டம்பர் 2025 12:11:39 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால ஒத்திகை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மூலம் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றில் அவசர கால ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இவ்ஒத்திகை பயிற்சியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் தம்மிடம் உள்ள பொருட்களை கொண்டு தம்மை தாமே எவ்வாறு காப்பாற்றி கொள்வது, வெள்ளத்தில் சிக்கியவர்களை இரப்பர் படகு மூலம் எவ்வாறு மீட்பது, மேலும் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு மிதவைகள் தயார் செய்து அதன் மூலம் எவ்வாறு வெள்ள காலங்களில் காலங்களில் தப்பிப்பது, மேலும் நாம் வெள்ள முன்னெச்சரிக்கையில் எவ்வாறு நடந்துகொள்வது போன்ற செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் 10 தீயணைப்பு மற்றும் மீட்பு அவசர கால குழுவினர் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்டு, 45 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு தலைமையிடத்தில் தயார் நிலையில் உள்ளனர். மேலும், வட்டார அளவில் 25 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களும் வட்டார அளவில் குழுக்களாக தயார் நிலையில் உள்ளனர். அவசர காலங்களில் மக்களுடன் இணைந்து மீட்பு பணிகள் மேற்கொள்வார்.
இன்றையதினம் நடைபெற்ற பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மீட்பு கருவிகளின் பயன்பாடுகள், தண்ணீரில் தத்தளிப்பவர்களை மீட்பது குறித்தும், தண்ணீரில் மூழ்கியவர்களை நீர் மூழ்கி வீரர்கள் மூலம் மீட்கப்படுவதும் தீயணைப்பு துறையின் சிறப்பு கருவிகளின் கண்காட்சி அமைக்கப்பட்டு அக்கருவிகள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது போன்ற அதன் பயன்பாடு குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தியணைப்பு அலுவலர் பானுபிரியா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் சரவணன், தீயணைப்புத்துறை மீட்பு பணியாளர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் அரபி மதரஸா ஆண்டு விழா
சனி 6, செப்டம்பர் 2025 4:47:49 PM (IST)

ரயில் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை : நெல்லையில் பயங்கரம்!!
சனி 6, செப்டம்பர் 2025 10:50:31 AM (IST)

பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில் 6½ பவுன் நகை திருடியவர் கைது!
சனி 6, செப்டம்பர் 2025 10:32:37 AM (IST)

போக்சோ வழக்கில் கைதான தூத்துக்குடி வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:27:07 PM (IST)

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு : பேரவைத் தலைவா் மு.அப்பாவு
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:32:38 PM (IST)

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து சபாநாயகர் மரியாதை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:43:11 AM (IST)
