» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
புதன் 3, செப்டம்பர் 2025 3:37:09 PM (IST)
நெல்லை மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட சிங்கிகுளம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன்களான முத்துமாரி (21), ஞான பாண்டியன் (19) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் கவனத்திற்கு வந்தது.
 இதனையடுத்து அவர் மேற்சொன்ன 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில் மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் உத்தரவின்பேரில்,  முத்துமாரி, ஞான பாண்டியன் ஆகிய இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




