» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரிவாள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நெருக்கடி : சீமான் குற்றச்சாட்டு
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:52:29 AM (IST)

அரிவாள் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நெருக்கடி கொடுப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார். 
 கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாவா நகரம், கட்டளைக்குடியிருப்பு, வடகரை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் அரிவாள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலில் ஈடுபடும் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்திக்கும் நிகழ்ச்சி நெல்லையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
 இந்த நிகழ்ச்சியில் சீமான் கலந்துகொண்டு பேசியதாவது: இரும்பு கருவிகள் உற்பத்தி செய்வதில் குறிப்பாக அரிவாள், பன்னரிவாள், மண்வெட்டி போன்ற விவசாயக் கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள், கோவில் குலதெய்வ வழிபாடு என்று மக்களின் புழக்கத்தில் உள்ள இரும்பு கருவிகளை உற்பத்தி செய்து வருகிறீர்கள்.
 நீண்ட நெடுங்காலமாக தொன்று தொட்டு பட்டறை வைத்து தொழில் செய்யும் இரும்பு தொழிலாளர்கள் இரும்பு கருவிகள் செய்தவதிலேயே முழுமையாக கவனம் செலுத்தி வருகின்றனர். இரும்பின் காலம் 5300 ஆண்டுகள் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூலமாக ஆய்வுகள் நிரூபித்து, இரும்பின் தொன்மை என்ற ஆய்வு நூலை வெளியிடப்பட்டது.
 தமிழர்கள் தான் இரும்பு ஆயுதங்களை உற்பத்தி செய்து கொடுத்தார்கள் என்று பெருமை பீற்றிக்கொள்ளும் திராவிட மாடல் அரசு, இரும்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொள்ளவில்லை. அரிவாள் தயாரிக்கும் தொழிலுக்கு காவல்துறை மூலமாக தமிழக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
 தென் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிகழும் சாதிய, ஆணவ, தீண்டாமை படுகொலைகளை தடுக்க தவறிய போலீஸ் துறையானது, இரும்புத் தொழிலாளர்களை ஒடுக்குவதை கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
 இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா, தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த மண்டலச் செயலாளர் அருண்சங்கர், கடையநல்லூர் மண்டலச் செயலாளர் கணேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல் மற்றும் அரிவாள் தயாரிக்கும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




