» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆன்லைன் செயலிகள் மூலம் வழிப்பறி செய்தால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 4, செப்டம்பர் 2025 8:57:36 PM (IST)
ஆன்லைன் செயலிகளை முறைகேடாக பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: Google Playstore-ல் Grindr (Gay Dating & Chat) Application பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை, ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இச்செயலியினால் முகம் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு, அதன் மூலம் பழக்கத்தினை ஏற்படுத்தி, ஆசை வார்த்தைகள் கூறி, ஓரின சேர்க்கைக்காக தனிமையில் அழைத்து சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து மிரட்டியும், அடித்து துன்புறுத்தியும், அவர்களிடமிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருகின்றனர். இது சம்மந்தமாக கிடைக்கப்பெறும் புகார் மனுக்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் இது போன்ற குற்ற செயல்புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றில் தங்களை அணுகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும், இதுபோன்ற ஆன்லைன் செயலிகளை தவறான முறையில் பயன்படுத்தி மோசடி குற்றத்தில் ஈடுபடும் நபர்களிடம் ஏமாறாமல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் Grindr App (கிரைண்டர் ஆப்) மற்றும் அதைப் போன்ற வேறு ஆன்லைன் செயலிகளை முறைகேடாக பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையையோ, அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் அரபி மதரஸா ஆண்டு விழா
சனி 6, செப்டம்பர் 2025 4:47:49 PM (IST)

ரயில் நிலையம் அருகே வாலிபர் வெட்டிக் கொலை : நெல்லையில் பயங்கரம்!!
சனி 6, செப்டம்பர் 2025 10:50:31 AM (IST)

பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில் 6½ பவுன் நகை திருடியவர் கைது!
சனி 6, செப்டம்பர் 2025 10:32:37 AM (IST)

போக்சோ வழக்கில் கைதான தூத்துக்குடி வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 5:27:07 PM (IST)

நீட் தோ்வைவிட கொடூரமானது ஆசிரியா் தகுதித் தோ்வு : பேரவைத் தலைவா் மு.அப்பாவு
வெள்ளி 5, செப்டம்பர் 2025 4:32:38 PM (IST)

திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து சபாநாயகர் மரியாதை!
வெள்ளி 5, செப்டம்பர் 2025 11:43:11 AM (IST)
