» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை திருமண்டல தேர்தலை உடனே நடத்த வேண்டும்: முன்னாள் லே செயலர் வேதநாயகம் வலியுறுத்தல்
வெள்ளி 5, செப்டம்பர் 2025 10:28:27 AM (IST)

சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல நிர்வாகிகள் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி திருமண்டல முன்னாள் லே செயலாளர் வேதநாயகம் தலைமையில் முன்னாள் நிர்வாகிகள், பேராயர் பர்னபாஸை சந்தித்து மனு அளித்தனர்.
 நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல முன்னாள் லே செயலாளர் வேதநாயகம் தலைமையில் டயோசீசன் முன்னாள் நிர்வாகிகள், நெல்லை சி.எஸ்.ஐ. பிஷப் பர்னபாஸை சந்தித்து கடந்த ஓராண்டாக நடத்தப்படாமல் உள்ள தேர்தலை நடத்த வலியுறுத்தி மனு அளித்தனர். அம்மனுவில் கூறி யிருப்பதாவது:- நெல்லை திருமண்டல பெருமன்றம் கடந்த 2024ல் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்த நிலையில் கடந்த ஓராண்டாக நிர்வாக தேர்தல் நடைபெறாத சூழ்நிலையில் தென்னிந்திய திருச்சபையால் நியமிக்கப்பட்ட நிர்வாக மன்றமானது திருமண்டல தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்ற னர். இதனால் நிர்வாக ரீதியான செயல்பாடுகள் நடைபெறாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நிலைக்கு திருமண்டல மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே தாங்கள் தலைமையேற்று நடத்த இருக்கும் நிர்வாகமன்ற கூட்டத்தில் திருமண்டல தேர்தல் நடத்துவது தொடர்பாக தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும் என மனுவில் தெரிவித் துள்ளனர்.
 நிகழ்ச்சியில் டயோசிசன் உயர்நிலைப்பள்ளிகளின் முன்னாள் மேலாளர் புஷ்பராஜ், சாராள் தக்கர் சுல்லூரி முன்னாள் தாளாளர் சாம்சன் பால்ராஜ், முன்னாள் பெருமன்ற உறுப்பினர்கள் கரையிருப்பு ஜெயராஜ், கென்னடி ஐன்ஸ்டீன், ஆசிரியர் பொன்னு, எபன் ராஜேந்திரன், செல்வின் மணிமுத்து, ஸ்டீபன் லாமேக், ஜான்பீட்டர், ஜெயசிங், சாலமோன், ஜேசுமணி, சாம் சுந்தர்ராஜா, பிரதீப்குமார், பில்லி, ஜி.ஆர்.எஸ், பாண்டியன், அன்புராஜ் ஜோசப், விஜயகுமார், ஆம்ஸ்ட்ராங், எஸ்.டி. காமராஜ், டியூக் துரைராஜ், குருவானவர் டேவிட் அன்பு பிரபாகர், கரையிருப்பு இமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)

நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன? போலீஸ் விசாரணை
சனி 1, நவம்பர் 2025 8:06:24 AM (IST)




