» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில் 6½ பவுன் நகை திருடியவர் கைது!

சனி 6, செப்டம்பர் 2025 10:32:37 AM (IST)

நெல்லை உடையார்பட்டியில் பெயிண்ட் அடிக்க சென்ற வீட்டில்  6½ பவுன் தங்க சங்கிலியை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (50). இவர்களின் சொந்த ஊர், நெல்லை சந்திப்பு உடையார்பட்டி. இங்கு இவர்களுக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான வீடு உள்ளது. இந்த வீட்டை சீரமைக்க முடிவு செய்த தம்பதியினர் அதற்கான ஆட்களை நியமித்து வீட்டு வேலை நடந்து வருகிறது.

இந்த வீட்டுக்கு வர்ணம் பூசும் பணியில் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் நடராஜன் (56) உள்ளிட்ட சிலர் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகளை தம்பதியர் பார்வையிட்டு வந்தனர். நேற்று முன்தினம் மதியம் கிருஷ்ணவேணி தனது கைப்பையில் தங்க நகைகளை வைத்து இருந்தார். இதனை நோட்டமிட்ட நடராஜன் நைசாக அந்த பையில் இருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை திருடி உள்ளார்.

சிறிது நேரம் கழித்து கிருஷ்ணவேணி தனது கைப்பையை பார்த்த போது நகை மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சந்திப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் நடராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory